பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்!-தேர்தல் ஆணைக்குழு-

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் முடிவினை எடுப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு நாளை மறுதினம் செவ்வாய்கிழமை கூடவுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என தேர்தல்  ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் இரு தினங்களில் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைவருக்கும் நிரந்திர நியமனம்!

Editor

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்கள் அனுப்பும் வசதி

wpengine

இனவாதத்தை ஒழிக்க! றிஷாட்டின் கரத்தை பலப்படுத்த அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

wpengine