பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் குறைக்க வேண்டிய தேவையில்லை – அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் குறைக்க எந்தவொரு அவசியமும் இல்லை என, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையகத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ள கண்காணிப்பு அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, ஏழு கண்காணிப்பு அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்தக் கலந்துரையாடலை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வடக்கைத்தவிர வேறு எந்த மாகாணத்துக்கும் பாரியதொரு பெரிய நிதி ஒதுக்கப்படவில்லை .

Maash

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

wpengine

அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசிக்கு பெறுமதி மிக்க பரிசு

wpengine