பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்! சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை- மஹிந்த

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், கூட்டு எதிர்க்கட்சிக்கே ஆதரவு வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் புத்தளத்திலுள்ள வீட்டில் இன்று பகல் இடம்பெற்ற கூட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முகங்கொடுக்க தான் தயார் என்றும், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்றும் அவர் கூறியுள்ளளார்.

தற்போதைய வடக்கின் நிலமைகளை பார்க்கும் போது தேசிய பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை உருவாகியுள்ளது தௌிவாகின்றது என்றும், இது தொடர்பில் தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வவுனியாவில்! பொதுபல சேனா

wpengine

போலி பேஸ்புக்! சில்வா முறைப்பாடு

wpengine

சூரியன் செய்தியில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் எதிரியா?எதிலியா?

wpengine