பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் இரத்து?

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடலை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அடுத்த சில வாரங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த ​​யோசனை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தல் காலதாமதம் ஆவதால் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரச பணியாளா்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த வேட்புமனுக்களை இரத்து செய்யுமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக பாராளுமன்றத்தில் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதால், அது தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Related posts

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

wpengine

பல இளம் பெண்களை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது – அவிசாவளையில் சம்பவம்!

Editor

10வயது ஷாக்கிர் ரஹ்மான் மீது ஆசிரியர் தாக்குதல்! மாணவன் வைத்தியசாலையில்

wpengine