பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்! கருத்தரங்குளை நடாத்த உள்ள ரணில்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முன்னிட்டு நாடுதழுவிய ரீதியில் கருத்தரங்குகளை நடத்த ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

நாடுதழுவிய ரீதியில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் கருத்தரங்குகளை நடத்துமாறு ஐ.தே.க.வின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் ஆரம்ப கருத்தரங்குகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம், 04ஆம் திகதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த கருத்தரங்குகள், விருப்பு வாக்கு சண்டைகளற்ற தேர்தல் முறை, அன்றும் இன்றும், எதிர்கால இலக்குகள் என்ற தலைப்புகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இக்கருத்தரங்குகளுக்காக கட்சியின் சட்டத்தரணிகள் பிரிவின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது

Related posts

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்க நடவடிக்கை

wpengine

பசில் இந்தியா உடன்படிக்கை! இன்று 40ஆயிரம் மெற்றி தொன் டீசல்

wpengine

விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி – MOP உர மூட்டையின் விலை 1000 ரூபாவால் குறைப்பு!

Editor