முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீர் விஜயமாக ஜப்பான சென்றுள்ளார்.
இந்த விஜயத்தின் போது மகிந்த ராஜபக்ச ஜப்பானில் தங்கியிருப்பார் எனவும், இதன் போது அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்தமுறை ஜப்பான் சென்றிருந்த போது தொண்டை நோய் தொடர்பாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
எனினும், இந்த தொண்டை நோய் சிறியதே என்றும், வரப் போகும் உள்ளூராட்சித் தேர்தல்களில் பரப்புரை செய்வதற்கு உடல்நிலை வலுவாக இருக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த ஆண்டில் மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்கு இரண்டாவது முறையாக ஜப்பான சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.