பிரதான செய்திகள்

உளவியல் ரீதியாக பல்கலைக்கழக மாணவர்கள் பாதிப்பு – பாராளுமன்றில் இம்தியாஸ் பாக்கீர் எடுத்துரைப்பு!

நாட்டில் தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் அதிகளவில் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இப்பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையலேயே கல்வி அமைச்சரிடம் இதனை வலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தொரிவிக்கையில், “நிறைவடைந்த ஐந்தரை மாத காலப்பகுதியில் மாத்திரம் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பேராதனை பேராசிரியர்களுடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டேன். பல்கலைக்கழக மாணவர்கள் நடைமுறை வாழ்வில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வருடத்தின் நிறைவடைந்த ஆறு மாதங்களுக்குள் 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதுடன், தற்கொலைக்கு முயற்சித்த இருவருக்கு பல்கலைகழக உளவியல் பிரிவு ஊடாக உளவியல் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் ஒருவேளை தான் உணவு உண்கிறார்கள்.

மாணவர்களின் செலவுகளுக்கு பணம் அனுப்ப முடியாத நிலையில் அவர்களின் குடும்பம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் உடல் ரீதியில் பாதிக்கப்பட்டு, உடல் மெலிந்துள்ளார்கள். விரிவுரைகளின் போது மாணவர்கள் மயங்கி விழுகிறார்கள்.

இந்த பிரச்சினையின் பாரதூரத்தன்மையை விளங்கி துரிதகரமாக ஒரு தீர்மானத்தை எடுக்க கல்வி அமைச்சு தலையிட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வாக்குகளைப்பெற்று அமைச்சர்களாகவும், மாகாண சபை உறுப்பினர்களாகவும் வருகின்ற நிலையினை மாற்ற வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine

யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணிதிரளுங்கள் – மன்னாரில் சாணக்கியன் பகிரங்க அழைப்பு!

wpengine

மாதல்கந்த புண்ணியசார தேரிடம் அமைச்சர் றிஷாட் சமூகங்களுக்கு இடையில் புரிந்துணர்வும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

wpengine