உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உலகின் வயதான பெண்மணியின் நீண்ட ஆயுள்! பன்றி, கோழி சாப்பிட மாட்டேன்

ஜமைக்காவின் மேற்கு பகுதியில் வசித்து வருபவர் வைலட் பிரவுன் (117), இவர் தான் தற்போது உலகிலேயே வயதான பெண் ஆவார். வைலட் கடந்த 1900 ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார். கடந்த மாதம் தான் இவர் தனது 117வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார்.

பிரவுன் தனது 97 வயதான மகனுடன் தற்போது வசித்து வருகிறார். தனது ஆயுள் ரகசியத்தை பற்றி அவர் கூறுகையில், நான் கடுமையாக உழைப்பேன்.

பன்றி, கோழி தவிர எல்லா உணவுகளையும் நான் சரியான அளவில் சாப்பிடுவேன் என அவர் கூறியுள்ளார். இதை தவிர என் நீண்ட ஆயுளுக்கு ரகசியம் வேறேதுமில்லை எனவும் வைலட் கூறியுள்ளார்.

உலகின் வயதான பெண்ணாக கருதப்பட்ட இத்தாலியின் எம்மா மார்ட்டின் லூகியாவின் மறைவுக்கு பிறகு அந்த பெருமைக்கு வைலட் தற்போது சொந்தகாரராக ஆகியுள்ளார்.

Related posts

அஸ்கிரிய பீடாதிபதி புதிய நியமனம்..!

wpengine

ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு..!

Maash

மன்னாரில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

wpengine