பிரதான செய்திகள்விளையாட்டு

உலகின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் விடை பெறுகிறார்.

இந்த வருட ஒலிம்பிக் போட்டிகளே தனது இறுதி ஒலிம்பிக் போட்டியாக அமையுமென உலகின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

குறுந்தூர ஓட்ட உலக சம்பியனும் ஒலிம்பிக் சம்பியனுமான உசைன் போல்ட் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் வரை தொடர்ந்தும் போட்டிகளில் பங்கேற்பார் என இந்த ஆண்டு ஜனவரி ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

போல்ட்டின் பயிற்றுவிப்பார் கிலன் மில்ஸின் அறிவுரைக்கமைய தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இந்த வருட ஒலிம்பிக் போட்டிகளின் பின்னர் போட்டியிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் பின்னர் சிறந்த நிலையில் ஓய்வு பெற விரும்புவதாகவும் போல்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீற்றர் ஒலிம்பிக் போட்டியிலும் உசைன் போல்ட் அவதானம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டருக்கான உலக சாதனை இவர் வசமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊழல்! லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா கொள்ளை

wpengine

பிரதேச சபை தவிசாளருக்கு 25ஆயிரம் ரூபா,உறுப்பினருக்கு 15ஆயிரம்

wpengine