பிரதான செய்திகள்

உயிரிழந்துவிட்டோமா, இல்லையா என்பதை அறிவதற்காகவா வந்தீர்கள் அமைச்சர் ஹக்கீம் ஆவேசம் (வீடியோ)

ஒரு வாரகாலமாக வெள்ளம், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு நகரில் உள்ள மக்களை பார்வையிட  சில பகுதிகளுக்கு விஜயம் செய்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்திய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது மகள் உட்பட ஆதரவாளர்களுடன் கொழும்பு – வெல்லம்பிடிய
பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக பகல் விஜயம் மேற்கொண்டார்.

அங்கு பாதிக்கப்பட்ட பலருடனும் அவர் சந்தித்து கலந்துரையாடியதோடு அத்தியாவசிய  தேவைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். இதனிடையே வெள்ளம் ஏற்பட்டு இடம்பெயர்ந்து
மூன்று தினங்களாகியும் இதுவரை வராத அரசியல்வாதிகள் இன்று மட்டும் வந்து பிரயோஜனம்  என்ன என்ற கேள்வியை வெல்லம்பிட்டிய மக்கள் மிகவும் கோபத்துடன்  எழுப்பியுள்ளனர்.

உயிரிழந்துவிட்டோமா, இல்லையா என்பதை அறிவதற்காகவா வந்தீர்கள் என்றும் அமைச்சர்
ஹக்கீமிடம் வெல்லம்பிடியவில் பாதிக்கப்பட்ட மக்கள் வினா எழுப்பினர்.

Related posts

முஸ்லிம் ஆசிரியர்களுக்கு சாரி அணிந்து வருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தமிழர்கள்

wpengine

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

wpengine

தேர்தல் ஒழுங்குகளை மீறிய அரச பணியாளர்கள்

wpengine