பிரதான செய்திகள்

உயிரிழந்தவர்களுக்கு மன்னார் மாவட்ட செயலகத்தில் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றிருந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மன்னாரில் தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்ட செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் காலை 8.30 மணி முதல் மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மாவட்டச் செயலக பணியாளர்களும் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதோடு, தேசிய துக்கதினம் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, கறுப்பு கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளன.

Related posts

முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைக்கும் மாநாயக்க தேரர்

wpengine

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்!

Editor