கட்டுரைகள்பிரதான செய்திகள்

”உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது.” குவைதிர்கானுக்கும் இது புரிய வேண்டும்.

வழிப்பறித் திருடர்களும் கொள்ளைக் காரர்களும் தொலைக்காட்சிக்கு வந்து விவாதம் புரிய ஆசைப்படுகிறார்கள். குவைதிர்கான் என்ற குப்பார் கான் இப்போது தன்னைப் பிரபல்யப் படுத்திக் கொள்வதற்காக பல்வேறு யுக்திகளைக் கையாள்கிறார்.

தான் செய்த கொலைகளையும் வழிப்பறிக் கொள்ளைகளையும் ஏஜென்சி என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை ஏமாற்றிப் பணம் கறந்த சம்பவங்களையும் மறைப்பதற்காகவே அவர் இவ்வாறான தந்திரோபாயங்களைக் கையாண்டு தன்னை ஒரு சமூகவாதியாக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றார்.

தான் காழ்ப்புணர்வு கொண்ட அமைச்சர் ரிஷாட்டை கேவலப்படுத்துவதற்காக நிதிக்குற்றப் புலானாய்வுப் பிரிவில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக் கொண்டார். பின்னர் கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடாத்தி ரிஷாட் மீது அபாண்டங்களை பரப்பினார். தொடர்ந்து ஆனந்த தேரரிடம் குர ஆனைக் கொடுத்து ரிஷாட்டிடம் சத்தியம் வாங்குமாறு நிர்ப்பந்தித்தார்.

எதுவுமே வெற்றிபெறாத நிலையில் மீண்டும் ஒருமுறை ரிஷாட்டுக் கெதிராக நிதிக்குற்றப் புலானாய்வுக்கு செல்ல ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். இதற்கு மத்தியிலே அமைச்சர் ரிஷாட்டை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைத்துள்ளார் இந்தப் பைத்தியகாரக் கான்.

”இறால் தன் தலையில் மலத்தை வைத்துகொண்டு நாறுது நாறுது” என்று சொல்வது போல் தான் இருக்கின்றது இவரின் கதையும்.

இவர் ஒரு சமூகத் துரோகி, முஸ்லிம்களின் விரோதி, கோடரிக்காம்பு.

மறிச்சுக்கட்டியில் அந்த பிரதேச முஸ்லிம்கள் தமது காணிகளில் சென்று கொட்டில்களை அமைத்த போது பௌத்த தேரர்கள் அங்கு வந்து அட்டகாசம் செய்து கொட்டில்களை பிடுங்கியெறிந்த சம்பவம் அநேகருக்குத் தெரியும். பௌத்த தேரர்களுடன் மஞ்சள் காவியுடையுடன் குவைதிர்கானும் அங்கு வந்தது உங்கள் அநேகருக்கு தெரியாது. நானும் ஒரு அகதியே. இவர் மஞ்சள் உடையுடன் நின்ற போது இவர்தான் என உறுதிப்படுத்திக் கொண்டு அவரை ஏறெடுத்துப் பார்த்த போது வெள்ளை வானுக்குள் சென்று குந்திக் கொண்டார். தேரர்களுக்கு சரியான இடத்தைக் காட்டுவதற்கு வழிகாட்டியாக இவரைப் பயன்படுத்தி உள்ளனர் என்றும் இப்போது புரிகின்றதல்லவா?

Related posts

அக்கரைப்பற்றுப் பிரதேச சபைக்குப் புதிய விவாகப்பதிவாளர் நியமனம்.

wpengine

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும்.

wpengine

ஊடக நிறுவனங்களுக்கும் , ஊடகவியலாளர்களுக்குமான பாதுகாப்பினை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் : மீரா அலி ரஜாய்

wpengine