பிரதான செய்திகள்

உதவி பிரதேச செயலாளர் 7ஆண்களை பாலியல் பலாத்காரம்

வலப்பனை பிரதேச உதவி பிரதேச செயலாளரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வலப்பனை பிரதேச  உதவி செயலாளரான ரமேஷ் அசங்க விக்கிரமரத்தினவுக்கே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 ஏழு ஆண்களை  பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தா

பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வலப்பனை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், சந்தேகநபர் இன்று (09)  வலப்பனை காரியாலயத்திற்கு கடமைக்கு வந்த போது,  அவரை  கைது செய்துள்ளனர்.

பின்னர் இவர் வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, எதிர்வரும் (20) ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

மட்டகளப்பு அரசியல்வாதிகளே! காத்தான்குடி கடற்கரை வீதியினை பாருங்கள் (படங்கள்)

wpengine

ஞானசார தேரருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள மஹிந்தவின் சட்டத்தரணி!

wpengine

நுவரெலியா பயணம்! குடும்பத்தை துன்பத்தில் ஆழ்த்திய முகநூல் “செல்பி”

wpengine