செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தின குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொள்வதற்காக இன்று (06) அவர் கண்டி சென்றிருந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்றதால் ஈஸ்டர் தின தாக்குதல் என்று கூறுகிறார்கள். போயா தினத்தில் இடம்பெற்றிருந்தால் அதனை போயா தின தாக்குதல் என்று கூறியிருப்பார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக கூறினார்கள். தற்போது அவரை தேடுகிறார்களா?

பிரதான சூத்திரதாரி யாரென்பது எனக்கு தெரியும். ஆனால் ஊடகங்களுக்கு அதை கூற முடியாது. நாட்டின் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருப்பவர்களுக்கும் அறிவித்துவிட்டே அதனை பகிரங்கமாக அறிவிப்பேன். 

பிரதான சூத்திரதாரியின் ஆரம்பம், அவர் தொடர்புபட்டிருந்த நபர்கள், அவர் இருந்த இடம், பிரதான சூத்திரதாரி சஹ்ராணுக்கு பயிற்சி அழித்த விதம், அவரை வழி நடத்திய விதம் என சகல விடயங்களும் எனக்கு தெரியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பேச்சு பல்லாக்கு! தம்பி பொடிநடை! வை.எல்.எஸ் ஹமீதுக்கு இது சமர்ப்பணம்.

wpengine

சதொச நிறுவனத்துக்கு கொக்கெயின் கொண்டுவரப்பட்டது எவ்வாறு?

wpengine

ராஜபக்ஷவுக்கு இடையில் பனிப் போர்! நாமலின் மாமாவுக்கு பணிப்பாளர் பதவி

wpengine