பிரதான செய்திகள்

‘ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர்’ – ​சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தினத்தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நெளபர் மௌலவி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அடிப்படைவாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசீம் என்பவர் 2016 ஆம் ஆண்டே அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவருக்கு நௌபர் மௌலவி என்பவரே கட்டளைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்லாத்தை கேவலப்படுத்தினால் அது நல்ல செயல் என பிரதமர் நினைக்கிறாரா?

wpengine

ஆளுக்கொரு ஆசை, அரசை வீழ்த்துவதில் அயராத வீணாசை!

wpengine

பிரபாகரன் கொலை செய்ய, சலுகைக்காக முஸ்லிம்கள் கையேந்துகிறார்கள்.

wpengine