அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு பிள்ளையான், ஆசாத்மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சி.ஐ.டி. அதிகாரி தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போகின்றது .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அறியப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன்  உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என பிள்ளையானின் செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலானா என்பவர் செனல் 4இற்கு தெரிவித்தார் என அந்த அதிகாரி டெய்லிமிரருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

மௌலானா  ஏற்கெனவே இது குறித்த விபரங்களை செனல் 4இற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து டெய்லி மிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் தொடரும் அதேவேளை தேசிய புலனாய்வு பிரிவிற்காக பணியாற்றிய முன்னாள் உயரதிகாரிகள்  சிலருக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து  குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத் மௌலானவுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ள இந்த அதிகாரிகள்; முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சிறைத்தண்டiயை அனுபவித்தவேளை பிள்ளையான் சிறையிலிருந்தவாறே உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கான திட்டமிடலில் ஈடுபட்டார் என ஆசாத்மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சிக்கும் தெரிவித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசாத்மௌலானா தெரிவித்துள்ள விடயங்கள் சி.ஐ.டி. அதிகாரி ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ள விடயங்களுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகின்றது. 

ஆசாத் மௌலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சிஐடியினர் பல தடவை பிள்ளையானை விசாரணை செய்துள்ளதாக தெரிவித்துள்ள சிஐடியினர் இந்த சதி முயற்சியில் தொடர்புபட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசிங்கம் கொலை தொடர்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்தவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக  ஜஹ்ரான் குழுவினரின் உதவியை பெறுவதற்கு பிள்ளையான் உதவினார் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

டக்ளஸ் தேவானந்தா கேள்வி! அமைச்சர் சுவாமிநாதன் காலஅவகாசம்

wpengine

அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கவேண்டும் – றிசாத் எடுத்துரைப்பு

wpengine

தேர்தலின் பின்பு கோத்தாவுடன் இணைவும் சஜித்

wpengine