உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

‘இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியா!’ உருவாக்குவோம் -சாத்வி பிராச்சி (விடியோ)

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் சாத்வி பிராச்சி, இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பேசியிருக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்தது முதலே, இஸ்லாமிய சமூகத்தினர், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் பற்றி தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருபவர் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் சாத்வி பிராச்சி.

இந்நிலையில், தற்போது சாத்வி பிராச்சியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதற்கு, பலதரப்பட்டவர்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

அந்த சர்ச்சை வீடியோவில், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம். தற்போது, இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.

அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படத்தை இந்துஸ்தானியர்கள் தோல்வி அடையச் செய்ய வேண்டும். மேலும், நடிகர்கள் ஷாருக்கான், அமீர்கான் ஆகியோர் பாகிஸ்தான் ஆதரவாளர்களாக செயல்படுகிறார்கள். அதனால், இஸ்லாமியர்கள் இல்லாத பாலிவுட்டையும் உருவாக்க விரும்புகிறேன்” என சாத்வி பிராச்சி கூறி உள்ளார்.

சாத்வி பிராச்சியின் இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு, சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்து, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யானி, ” இதுபோன்ற கருத்துகளை கூறுவது தவறானது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் 24 ஆம் திகதிக்கு பிறகு முறைப்பாடு செய்ய முடியாது.

wpengine

மோசமாகப் பாதிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மக்களின் பிரச்சினை! வன்னி எம்.பிக்களுடன் இணைந்து கொழும்பில் வலியுறுத்துவேன் – றிசாத்

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த தயார்! இம்மாத இறுதியில்

wpengine