பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

இஸ்லாமியர்களின் யாழ் பெரிய பள்ளிவாசலிக்கு சென்ற மைத்திரி

யாழ்ப்பாணம் – பெரிய மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அந்த வகையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியதுடன் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த சந்திப்பில் தொழில்‌ அமைச்சர்‌ நிமல் சிறிபால டி சில்வா, பற்றிக்‌, கைத்தறி துணிகள்‌ மற்றும்‌ உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர்‌ தயாசிறி ஜயசேகர, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த ஆண்டில் மாத்திரம் 9 இலட்சத்திற்கும் அதிக கடவுச்சீட்டுகள் விநியோகம்!

Editor

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு!

wpengine

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை

wpengine