பிரதான செய்திகள்

இஸ்ரேலிய சூத்திரதாரி இலங்கை வர அனுமதிக்க வேண்டாம்-முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கையின் பல நவீன கட்டிடங்களை உருவாக்குவதற்கென இஸ்ரவேல் உலகப் புகழ் கட்டடக் கலைஞர் என்ற ரீதியில் மோசே சாதி இலங்கை வருவதை முஸ்லிம் முற்போக்கு முன்னணி கடுமையாக எதிர்க்கின்றது.

முன்னாள் சிரேஷ்ட அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

பலஸ்தீனத்தில், கிழக்கு பலஸ்தீனத்திலும் மஸ்ஜிதுல் அக்ஸா பிரதேசத்திலும் பல புதிய குடியிருப்புக்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர் இந்த நிபுணர் என்று சொல்லப்படுகின்ற இஸ்ரவேலர்.  அவர் ஏன் இலங்கைக்கு வரவேண்டும்? இலங்கையில் நல்ல கட்டட நிபுணர்கள், கட்டட கலைஞர்கள் இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. இவருடைய வருகை இரகசியம் நிறைந்துள்ளதாக சர்வதேச ஊடகத்துறையினர் தற்போது கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவருடைய இலங்கை வருகை இந்த நாட்டு அரசின் பலஸ்தீன் சார்பான கொள்கைகளை திசை மாறச் செய்யும் நடவடிக்கையில் ஒரு உச்ச கட்டமாகத் அமைகின்றது. இந்த நாட்டை அமெரிக்க நோர்வேக்கும் சியோனிச வாதிகள் மூலம் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு இந்த அரசாங்கமும் குறிப்பாக வெளிநாட்டு அமைச்சரும் மறைமுகமாக எடுத்து வருகின்ற நடவடிக்கை இப்போது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் இலங்கை வருவதன் மூலமாக இலங்கைக்கு பல தீமைகள் ஏற்பட இருக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிர்காலத்தில் பெரும் தீங்கு விளைய இருப்பது முன்னறிவித்தலாக இந்த நிபுணருடைய வருகை அமைகின்றது.

சிங்கள மன்னர்கள் காலத்திலிருந்து இந்த நாட்டில் மிகவும் நுட்பமாக எழுப்பப்பட்ட தாகபே, மஹாதாகபே, ரஜவாசல, போன்றவைகளை நிர்மாணிப்பதற்கு இஸ்ரேவலருடைய சேவையை இந்த நாட்டு மன்னர்கள் எதிர்பார்த்தார்களா? அதுமட்டுமல்ல, முன்னேஸ்வரம், திருக்கேதிஸ்வரம் போன்ற சிற்பக்கலைக் கோவில்களை நிறுவுவதற்கு இஸ்ரேவலர்களா உதவி செய்தார்கள்?  அது மட்டுமல்ல, இன்று உலகப் புகழ் பெற்ற கொழும்பு நூதனசாலை, கொழும்பு பெரிய தபாலகம், கொழும்பு துறைமுகம் போன்ற கட்டிடங்களை எழுப்பியது இந்த நாட்டிலே படிக்காத மேதை வாப்புச்சிமரைக்கார் (சேர் றாசிக் பரீத் உடைய பாட்டனர்) அல்லவா? அதற்காகவேண்டி இஸ்ரேவலர் நிபுணர்களின் உதவி தேவைப்பட்டதா? சிங்கள ராஜதாணிதனிலே இந்த மாபெரும் கட்டங்களைக் கட்டிய கட்டடக் கலைஞர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் இஸ்ரவேலின் அரைப்பாகத்தை தன் தோள் மீது சுமக்கக் கூடிய வல்லமை பெற்றவர்கள்.

எனவே இந்த சியோனிச வாதத்தை இந்த நாட்டிலே நிலை நிறுத்துவதற்காக வேண்டி எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு முத்தாய்ப்பு வைக்கின்ற செயலாக இது அமைகின்றது. ஒரு பக்கத்திலே வட மத்திய மாகாணத்திலே விவசாயங்களுக்கென இஸ்ரவேலர்களுக்கு காணிகள் வழங்கப்படுகின்றன. கொழும்பை நடுமையமாகக் கொண்டு இஸ்ரேவலர்களால் ஒரு பெரும் செய்மதி உருவாக்கப்படுகின்றது. இது எதைக் காட்டுகின்றது. இந்த விடயங்களைச் செய்வது யார்? ஜனாதிபதியினுடைய அரசாங்கமா? அல்லது ரணில் விக்கிரமசிங்கவினுடைய அரசாங்கமா?  இந்த நாட்டு 98 சதவீதமான முறையில் வாக்களித்து பதவிக்குக் கொண்டு வந்த  ஜனாதிபதி மிகவும் நுணுக்கமான அவதானத்தை இதன் மீது செலுத்த வேண்டுமென நாம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.

அது மட்டுமல்ல, முஸ்லிம் அமைச்சர்களும், அரசிலுள்ள  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனை கவனத்திற் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் கூட்டாக சென்று ஜனாதிபதியிடம் இந்த நிபுணருடைய வரவை தடை செய்வதற்கும் அவர் மேற்கொள்ளவிருக்கின்ற கட்டடப் பணிகளை இலங்கையில் உள்ள புகழ் பெற்ற கட்டடக் கலைஞர்களுக்கு வழங்குவதற்கு நடை முறை சாத்தியமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முஸ்லிம் முற்போக்கு முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்- அமைச்சர் றிசாட்

wpengine

அமைச்சர் றிசாத் தலைமையிலான கூட்டத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை

wpengine

மன்னார் மாவட்ட கல்வி அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட முசலிப்பிரதேசம்.

wpengine