உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­லம்! காரால் அடித்து கொலை (வீடியோ)

பெல்­ஜி­யத்தின் பிரஸல்ஸ் நகரில் இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­ல­மொன்றின் போது அந்­நாட்டு வல­து­சாரி செயற்­பாட்­டா­ளர் ஒருவர், முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை சனிக்­கி­ழமை காரால் மோதிச் சென்ற சம்­பவம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேற்­படி சம்­பவம் தொடர்­பான அதிர்ச்­சி­யூட்டும் காணொளிக் காட்­சிகள் இணை­யத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

பிரஸல்ஸ் நக­ரி­லுள்ள விமான நிலையம் மற்றும் புகை­யி­ரத நிலையம் என்­ப­வற்றின் மீது கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான எண்ணப் போக்­குகள் அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் சனிக்­கி­ழமை இஸ்­லாத்­துக்கு எதி­ராக அந்­நாட்டு வல­து­சாரி செயற்­பாட்­டா­ளர்­களால் பிரஸல்ஸ் நகரில் அந்­நாட்டின் ஜிஹா­தி­களின் தலை­நகர் என அழைக்­கப்­படும் மொலன்பீக் எனும் இடத்­துக்கு அண்­மையில் நடத்­தப்­பட்ட ஊர்­வ­லத்தின் போதே மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த இஸ்­லா­மிய எதிர்ப்பு ஊர்­வ­லங்­களை நடத்த அந்­நாட்டு அர­சாங்கம் தடை விதித்­தி­ருந்த நிலையில் அந்தத் தடை­யையும் மீறி நூற்­றுக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மத்­திய பிரஸல்ஸ் சதுக்­கத்தில் கூடி ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுக்க முயற்­சித்­தனர்.

இதன்­போது பொலிஸார் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் கலைக்க கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிர­யோ­கத்தை மேற்­கொண்­ட­துடன் 100 பேருக்கும் அதி­க­மா­னோரை கைது­செய்­தனர். அவர்­களில் அநேகர் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட்ட நிலையில் இருவர் மட்­டுமே தொடர்ந்து தடுத்து வைக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லையில் மேற்­படி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட செயற்­பாட்­டாளர் ஒருவர் தனது காரால் தெருவில் சென்ற முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை மோதிச் சென்று படு­கா­யப்­ப­டுத்­தி­யது மட்­டு­மல்­லாமல், சிறிது தூரத்­திற்கு அப்பால் காரை நிறுத்தி அந்தப் பெண் காய­ம­டைந்து தெருவில் விழுந்து கிடக்கும் காட்­சியை தனது கைய­டக்கத் தொலை­பேசி மூலம் புகைப்­ப­ட­மெ­டுத்­துள் ளார்.

இதனைய­டுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலி ஸார் அந்த வலதுசாரி செயற்பாட்டாளரைக் கைது செய்துள்ளனர். அவரால் காரால் மோதப்பட்ட பெண் படுகாயமடைந்திருந்த போதும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை சுய நினைவுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் முன்னால் அதிபர் நிதி மோசடி

wpengine

ரணிலுக்கு எதிரானவர்களை மொட்டுகட்சியில் இருந்து நீக்க ரணில் நடவடிக்கை! பதவிகள் வழங்க நடவடிக்கை

wpengine

இம்போட் மிரர் ஊடக வலையமைப்பின் நிவாரண பணி (படம்)

wpengine