பிரதான செய்திகள்

இலஞ்சம் பெற்ற விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் இருவர்

இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் போகுந்தர விவசாய சேவைகள் மத்திய நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடமையாற்றும் ஒருவரே, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இவ்வாறு கைதாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

வயல் காணி ஒன்றை நிரப்பும் நடவடிக்கை தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாதிருக்க சந்தேகநபர் 20,000 ரூபாவை கோரியுள்ளார்.

இதில் 10,000 ரூபாவை பெற முற்பட்ட போதே இவரைக் கைதுசெய்துள்ளனர்.

இவரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஹக்கீம் தனது 17 வருட அரசியலில் சாணக்கிய அரசியலும்,சரணாகதி அரசியலும்

wpengine

எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது- அமைச்சர் றிசாத்

wpengine

ஆப்பிரிக்காவில் இருந்து நாளை ஸ்கைப் மூலம் இந்திய ஊடகங்களுக்கு ஜாகிர் நாயக் பேட்டி

wpengine