பிரதான செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு விளக்கமறியல்!

பனை மரத்தை வெட்டிய நபரிடம் இருந்து 15,000 ரூபாவை பலவந்தமாக பெற்றுக்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்கள் இருவரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மூதூர் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி இந்த இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் சிவில் உடையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது, ​​அந்த நபர் மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். குறித்த நபரை விடுவிக்க முப்பதாயிரம் ரூபா பணம் தேவையென தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அந்த தொகையை பனைமரம் வெட்டியவர் வழங்க தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த நபரிடம் இருந்து அதிகாரிகள் 15,000 ரூபாயை பலவந்தமாக பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து சட்ட விதிகள் உட்பட அடிப்படை முதலுதவி பயிற்சி

wpengine

தமிழ் தலைமைகள்! தமிழ் மக்களுக்கு ஒன்றுமே பெற்றுக்கொடுக்கவில்லை- எஸ்.வியாழேந்திரன்

wpengine

எனது புகைப்படம் மற்றும் அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாது

wpengine