உலகச் செய்திகள்செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் கனடாவில் சுட்டுக்கொலை . .!

கனடாவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மார்க்கம் பகுதியில் வசித்து வந்த 20 வயதான பெண் ஒருவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததுடன், வீட்டில் வளர்க்கப்பட்ட நாயொன்றும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த 26 வயதான ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழுவொன்றினால் திட்டமிட்ட வகையில் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

விடுதலைப்புலிகளினால் தற்போது சூழல் மாற்றமடைந்து விட்டது

wpengine

கிடாச்சூரி கிராத்தை பாராட்டிய முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்

wpengine

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு …

Maash