பிரதான செய்திகள்

இலங்கையில் மீண்டும் பரவி வரும் மலேரியா குறித்து அறிவுறுத்தல்!

இலங்கையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேருக்கு மலேரியா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மலேரியா தொற்று பரம்பல் உள்ள நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

14 ஆண்டுகளின் பின்னர், இந்த ஆண்டு, பேருவளை பகுதியைச் சேர்ந்த ஒருவர், மலேரியா தொற்றினால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க நாட்டுக்கு சென்று திரும்பியிருந்த நிலையில், அவருக்கு மலேரியா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, கடந்த 30 ஆம் திகதி மலேரியா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும், மலேரியா குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலேரியா பரம்பல் குறித்து யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

Related posts

தேசிய மக்கள் சக்தியின்புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் பைசாலின் வாகனம் விபத்து, ஒருவர் பலி .!

Maash

வவுனியாவில் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

Maash

இயலாமையான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது

wpengine