பிரதான செய்திகள்

இலங்கையில் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

கொழும்பில் மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கட்டண அதிகரிப்புக்கு தீர்வாக மின்சார வாகனங்களை பொது போக்குவரத்திற்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள், ரயில்கள் என அனைத்துப் பொதுப் போக்குவரத்து சேவைகளையும் மின்சாரமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், மின்சார முச்சக்கரவண்டிகள் இந்த வருடம் சந்தைக்கு வரும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் மின்சார முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மின்சார வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் எரிபொருட்களினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நட்டத்தில் இயங்கும் டிப்போக்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையை வியாபாரமாக கருதி தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக சம்பவம் விசாரணை வேண்டும்

wpengine

வடக்கு, கிழக்கில் சிதைவடைந்துள்ள பாதைகள், பாலங்களை புனரமையுங்கள்! றிசாட் எம்.பி. கோரிக்கை .

Maash

மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா

wpengine