பிரதான செய்திகள்

இலங்கையில் திருணம் நடாத்த தடையா? சுகாதார நிலையத்தில் ஆலோசனை

இலங்கையில் திருமணம் நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, முழுமையான சுகாதாரத்துடன் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


திருமண நிகழ்வுகளுக்கு குறைந்த பட்ச எண்ணிக்கையிலானோரை இணைத்துக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மைதானங்களில் இரவு நேரங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக அனுமதி வழங்க கூடாதென அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார்.


தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 18 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹக்கீம் காங்கிரஸின் ஏமாற்றுக்கு நாம் இன்னும் ஏமாறும் சமூகமா?

wpengine

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் சுற்றிவளைப்பு

wpengine

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று பூர்த்தி

wpengine