பிரதான செய்திகள்

இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள பாகிஸ்தான் மக்கள்

பாகிஸ்தானில் நேற்று முன்தினம்  இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை  செய்யப்பட்டிருந்தார்.  இந்த சம்பவம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  

இந்த நிலையில்,   கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் இலங்கையிடம் ஒரு குழுவினர் மன்னிப்பு கோரி நின்றதை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. 

மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பிரியந்த குமார என்ற இலங்கையர் பாகிஸ்தானில் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இவ் மனிதாபிமானமற்ற செயலிற்காக அவர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் இலங்கையிடம் மன்னிப்பு கேட்பதைக் காணமுடிகின்றது.

மேலும், இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில்  ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

மன்னிப்பு கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. 

Related posts

அத்துமீறிய சிங்கள குடியேற்றம்! சமலின் கவனத்திற்கு கொண்டு வந்த சாணக்கியன்!

wpengine

ஆளுங் கட்சியின் தலைவராக ஏர்டோவான்

wpengine

ATM பாவனையாளர்களின் கவனத்திற்கு! வெளிநாட்டு திருடர்கள்

wpengine