கிளிநொச்சிசெய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவுயாழ்ப்பாணம்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மீது வாள் வெட்டு. – விசுவமடுவில் சம்பவம்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து சாரதி மீது விசுவமடுப்பகுதியில் வைத்து இன்று(7) இரவு இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி சாரதி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இந் நிலையில் அவரை தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பயணிகளை இறக்குவதற்காக பேருந்தை நிறுத்தியபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பண்டிகை காலத்தில் சட்டங்களை மீறிய 1200 சில்லறை வியாபாரிகளுக்கு சட்டநடவடிக்கை.

Maash

மன்னார் ரயிலில் மோதி தற்கொலையா? உடல் மன்னார் வைத்தியசாலையில்

wpengine

இந்தியாவின் தடுப்பூசி இன்று சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்களுக்கு

wpengine