பிரதான செய்திகள்

இலங்கை சுதந்திரத்தின் பின்னர்! முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் இல்லாத அமைச்சரவை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறவில்லை.


அமைச்சரவையில் இரண்டு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் முஸ்லிம் அரசியல்வாதி எவரையும் அரசாங்கம் அமைச்சராக நியமிக்கவில்லை.

புதிய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை.

எனினும் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் அமைச்சர் ஒருவர் இருக்கின்றார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளை அடுத்து அமைச்சரவையில் இருந்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகினர்.

அப்போது கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சுதந்திரத்தின் பின்னர் முஸ்லிம் எவரும் இல்லாத அமைச்சரவை உருவாகியுள்ளதாக கூறியிருந்தார்.

இது நாட்டிற்கு பாதிப்பான நிலைமை எனவும் குறிப்பிட்டிருந்தார். எனினும் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் பின்னர் பதவியேற்றுக்கொண்டனர்.

எனினும் இலங்கை சுதந்திரத்தின் பின்னர் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் இல்லாத அமைச்சரவையாக புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஷாபியிடம் விசாரணைமேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியிடம் வாக்குமூலம்

wpengine

நெல்லுக்கான உரிய நிர்ணய விலை இல்லாமையினால் மன்னார் விவசாயிகள் பாதிப்பு!

Editor

ஜனாதிபதிக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

Editor