பிரதான செய்திகள்

இலங்கை – சீனா நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சீனா பயணம்!

இலங்கை மற்றும் சீனா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்க பதிலொன்றில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

சீனத் தரப்பின் அழைப்பின் பிரகாரம் இவர்கள் எதிர்வரும் 24 முதல் 30 வரை Beijing, Ningbo, Shenzhen மற்றும் Guangzhou ஆகிய இடங்களுக்கு பயணிக்கவுள்ளனர்.

இதன்போது சீன தேசிய மக்கள் காங்கிரஸ், வெளியுறவு அமைச்சகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறை மற்றும் நகரசபையின் உயர் அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் ரயில்வே, துறைமுகங்கள், மின்சார வாகனங்கள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் போன்றவற்றிலும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று குறித்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

முசலி கல்வி கோட்டத்தில் நான்கு மாணவிகள் மட்டுமே சித்தி

wpengine

கைப்பற்றப்பட்ட 494 கிலோ 48 கிராம் ஹெராயின் போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளது.

Maash

மருத்துவ துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Maash