பிரதான செய்திகள்

இறைச்சி வாங்குவோரின் கவனத்திற்கு

நோய்வாய்ப்பட்ட மிருகங்கள் இலங்கையில் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரச மிருக வைத்தியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் மாடு, ஆடு, பன்றி போன்றவற்றுக்கு கடந்த பல வாரங்களாக சுகாதார சான்றிதழ் விநியோகிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாகவே பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், உணவுக்காக சந்தையில் வைக்கப்பட்டுள்ள கால்நடை இறைச்சி வகைகளின் சுகாதாரத் தன்மை சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளதாகவும் அரச மிருக வைத்தியர் சங்கத்தின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உணவுக்காக இறைச்சி வாங்கும் மக்களை இறைச்சியின் தரத்தை பார்த்து வாங்குமாறும், மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

“எரிக்கும் மியன்மார் குறுதியில் குளிக்கும் உம்மத்”

wpengine

ஒரு கோடி 20இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள்

wpengine

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர்

wpengine