பிரதான செய்திகள்

இறக்காமம் மாயக்கல்லி மலை சிலை! ஆளுநரை சந்தித்த ஹக்கீம்

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான உயர் மட்ட குழுவினர் இன்று சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று ஆளுநரின் கொழும்பு அலுவலகத்தில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இறக்காமம் மாயக்கல்லி மலை பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்காக முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதில் பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், எம்.எஸ்.தௌபீக் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இறக்காமம், மாயக்கல்லி மலை பிரதேசத்தில் விகாரை அமைப்பதற்கு ஒரு ஏக்கர் நில ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண காணி ஆணையாளரினால் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதற்கு அமைவாக இறக்காம பிரதேச செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரையை தொடர்ந்தே கிழக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பை மேற்படி உயர் மட்டக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

டக்ளசுக்கு அமைச்சர் பதவி வழங்கியவர்கள் அதாஉல்லாவுக்கு ஏன் வழங்கவில்லை ?

wpengine

105 நாட்களுக்கு மூடப்பட்ட பாடசாலை நாளை மாணவர்கள் இல்லாமல் ஆரம்பம்

wpengine

இரண்டரை வருடங்களுக்கு ஜனாதிபதியால் கூட பாராளுமன்றத்தை கலைக்க முடியாது

wpengine