பிரதான செய்திகள்

இறக்காமத்தில் இரத்த தான முகாம்

‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளின் கீழ் இறக்காமம் இளைஞர்கள் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான நிகழ்வு கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இறக்காமம் அனைத்து பள்ளிவாசல்கள் தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், இளைஞர் கழகங்கள் என்பனவற்றின் ஒத்துழைப்புடன் மூவின மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் முதற் தடவையாக இறக்காமம் இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் தாய்மார்களும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். இதில் பெறப்பட்ட குருதி நன்கொடை அம்பாரை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக் கிளைக்கு வழங்கப்பட்டது.

Related posts

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு..!!

Maash

வவுனியா பேருந்து நிலையம் தொடரும் போராட்டம்

wpengine

பெண்ணுக்கு கொரோனா! மினுவாங்கொடயில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

wpengine