அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

இராணுவத்தை அரசாங்கத்துக்கு நம்பிக்கையாக மாற்றுவதற்கும் தான் பணியாற்றுகின்றேன். ” ஜனாதிபதி “

இலங்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவம் 100,000 ஆகவும், கடற்படை 40,000 ஆகவும், விமானப்படை 18,000 ஆகவும் மட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசியப் பாதுகாப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

பணிபுரிபவர்களின் அளவு குறைத்த போதிலும், அதனைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இராணுவமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இராணுவத்திற்குச் சொந்தமான ஏராளமான விமானங்கள், இராணுவ ஆயுதங்கள் மற்றும் கப்பல்கள் காலாவதியாகும் நிலையில் உள்ளன, மேலும் இதுபோன்ற சூழ்நிலை நாட்டிற்குச் சாதகமாக இல்லை.

தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உபகரணங்களை வழங்குவதும், மேம்பட்ட சிந்தனை கொண்ட தொழில்முறை இராணுவமாக அதை மாற்றுவதும் தனது அரசாங்கத்தின் குறிக்கோளாகம்.

இராணுவத்தை அரசாங்கத்துக்கு நம்பிக்கையான இராணுவமாக மாற்றுவதற்கும் தான் பணியாற்றி வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

சிலாவத்துறை நீர்பாசன திணைக்களத்தின் அசமந்தபோக்கு! விவசாயிகள் பாதிப்பு! உரிய அதிகாரிகள் கவனம்

wpengine

பதில் அடி! வை.எல்.எஸ் ஹமீட் நாகரீகம் பற்றிப் பேச எந்த தகுதியுமற்றவர்.

wpengine

மாணவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு – கல்வி அமைச்சு

wpengine