பிரதான செய்திகள்

இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்

முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாட்டில் அவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்றையதினம் அறிவிக்கப்படவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில், குறித்த இயக்கத்தின் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலுக்கு ஆதரவாக சஜித் அணி கலத்தில்

wpengine

மஹிந்தவை சந்தித்த சீனா தூதுவர்! இரகசியம் வெளிவரவில்லை

wpengine

வீட்டுக்கு வீடு மரம் நடுகை திட்டம் வவுனியா செட்டிகுளத்தில் ஆரம்பம்

wpengine