பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சரின் வாகனம் விபத்து! காயம்

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்மோ பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகி மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆணமடுவ – பங்கதெனிய வீதியின் சேருகெலே பகுதியில் இன்று (20) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இந்த சந்தர்பத்தில் வாகனத்தில் இராஜாங்க அமைச்சர் இருந்த போதிலும் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மோட்டார் வாகன ஓட்டுனர் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஒன்றுகூடஉள்ள 4 முன்னாள் ஜனாதிபதிகள் ..!

Maash

சட்டத்தரணி – ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் ரிஷாட் எம்.பி.

Maash

புத்தளம் தப்போவ பகுதியில் 220 இற்கும் மேற்பட்டோர் வௌ்ளம் காரணமாக நிர்க்கதி

wpengine