பிரதான செய்திகள்

இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் (23-11-2018) நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்றது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான மோதலிற்கு பின்னர், இன்றைய சந்திப்பிலேயே மிகக்கடுமையான வார்த்தை மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதலின் உச்சக்கட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய சி.சிறிதரன், அவர் பிழையாக நடப்பதாக குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்ற அமர்வுகள் மதிய போசணத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மதிய போசணத்தை முடித்துக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஒன்று கூடினர். அவசர சந்திப்பிற்காக அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வது பற்றி இரா.சம்பந்தன் விளக்கமளித்தார்.

ஒக்ரோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்டவிரோதம், நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் தொடர்வது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அதற்கு மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்த 122 எம்.பிக்களும் கையொப்பமிட வேண்டுமென்றும் இரா.சம்பந்தன் கோரினார்.

அதற்கு “இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாங்களும் ஆதரவாக வாக்களித்தோம்.“ என்ற சத்தியக் கடதாசியிலேயே கையொப்பமிட கோரப்பட்டது.

மேலோட்டமான சில விவாதங்கள், கருத்து முரண்பாடுகளின் பின்னர் எம்.பிக்கள் கையெழுத்திட சம்மதித்தனர்.

அப்போது திடீரென சிறீதரன் எம்.பி, தான் கையெழுத்திட மாட்டேன் என்றார்.

கையெழுத்திட வேண்டுமென இரா.சம்பந்தன் வற்புறுத்தினார். இரு தரப்பும் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, சிறிது நேரத்தில் உக்கிரமான வார்த்தை மோதல் ஆரம்பித்தது.

மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது என சிறீதரன் கேள்வியெழுப்பினார்.
இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளிற்கிடையிலான மோதலில் நாங்கள் ஒரு தரப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லையென்றார்.

ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டமைப்பு ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்களிடமும் பகிரப்படும் கருத்துக்களை சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

எனினும், இரா.சம்பந்தன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
“நீர் கையெழுத்திடாவிட்டால், மஹிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் கையெழுத்திட மறுத்ததாகத்தான் சனங்கள் கதைப்பார்கள்.

Related posts

புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல அபிவிருத்திகளை செய்தேன்! இன்று வந்து சிலர் குறை சொல்லும் நிலை-அமைச்சர் றிசாட்

wpengine

மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் சுகயீன விடுமுறை

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்கள்,இலங்கை முஸ்லிம்கள் குறித்தும் ஹிஸ்புல்லாஹ் பேச்சுவார்த்தை

wpengine