பிரதான செய்திகள்

இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளராக அமைச்சர் றிஷாட் ஜனாதிபதியினால் நியமனம்

இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் சகல ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் கண்டறிதல் இந்த புதிய அமைப்பாளர்களின் கடமையாகும்.

Related posts

விக்கீ யின் செயற்பாடு பிரபாகரன் துப்பாக்கியால் செய்ய முயன்றதற்கு சமனாகவுள்ளது

wpengine

சற்றுமுன்பு சுந்தரம் அருமைநாயகத்தையும், ரூபவதி கேதீஸ்வரனையும் தொடர்புகொண்ட மஹிந்த

wpengine

விக்னேஸ்வரனினால் கூட்டமைப்புக்குல் பிரச்சினை

wpengine