பிரதான செய்திகள்

இரண்டு மாதத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

(ஊடகப்பிரிவு)

இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நேற்றுவரை (05.11.2017) 20ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தொகை முழுவதும் சந்தைக்கு விநியோகத்திற்கென அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டரிசியானது கிலோகிராம் 74ரூபாவுக்கு விற்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் 25கிலோவிற்கு மேற்பட்ட அரிசியை கொள்வனவு செய்பவருக்கு கிலோ கிராம் 73ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ள 30ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசியில் 15ஆயிரம் மெற்றிக்தொன் சம்பாவுக்கான கட்டளைகள் அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் குறித்த தொகையான அரிசியானது இந்தமாத நடுப்பகுதியில் வந்து சேருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்த அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 926மில்லியன் ரூபாவை செலவிடுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

Related posts

மக்கள் உரிமைகளை பெற்றுக்கொடுக்காத விக்னேஸ்வரன், இரா.சம்பந்தன்

wpengine

2025இல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் வசதிகளை வழங்குவதே, நோக்கம்

wpengine

ஒப்பந்த வேலையில் ஈடுபடும் பிரதேச சபை தொழில்நூற்ப உத்தியோகத்தர்

wpengine