பிரதான செய்திகள்

இயலாமையான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது

தற்போதைய அரசாங்கம் தனது குறைப்பாடுகளை மறைக்க கடந்த அரசாங்கத்தின் குறைப்பாடுகளை தேடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.


அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


மக்களின் சிந்தனையை திசை திருப்ப முயற்சித்து வருகிறது. கடந்த அரசாங்கத்தின் வீண் விரயங்கள் காரணமாக தம்மால் கடனை செலுத்த முடியாதிருப்பதாக கூறுகின்றனர்.


இயலாமையான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது. வழங்கிய வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைத்தே 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.


மூன்றில் இரண்டு பெரும்பான்மை இன்றி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனக் கூறுகின்றனர்.
எமது அரசாங்கம் 2015ம் ஆண்டு குறைந்த பலத்தை வைத்துக்கொண்டு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து நாட்டை முன்னோக்கி கொண்டு சென்றது.


தற்போதைய அரசாங்கத்திற்கு 90க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.


இப்படியான பின்னணியில் வரவு செலவு திட்டத்தை கூட முன்வைக்க முடியாத மிகவும் தோல்வியான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பம்பலப்பிட்டி மைதானத்தில் ரகர் விளையாட்டு போட்டி! பொலிஸ்மா அதிபர்,ரகர் சம்பியன் மஜித் பங்கேற்பு

wpengine

சமுர்த்தி பணத்தை கொள்ளையடிக்க ஐ.தே.க.முயற்சி

wpengine

ஏவுகணை பரிசோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் பல நாடுகள்

wpengine