பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

“இயற்கையை ஒன்றி வாழப் பழகுவோம்” முசலியில் ஆரம்பித்த அரசாங்க அதிபர்

நாடு பூராகவும் புதிதாக தரம் ஒன்றுக்கு பாடசாலை மாணவ மாணவிகளை இணைத்துக் கொள்வதையிட்டு ‘இயற்கையை ஒன்றி வாழப் பழகுவோம் ‘எனும் சிந்தனையோடு “ககுலு தருஉதான” தேசிய மரநடுகை நிகழ்வுகள் தேசிய ரீதியில் இன்று (15.02.2021) நாடு பூராகவும்  முன்னெடுக்கப்படும் அதேவேளை இன்று மன்னார் மாவட்டத்தில் அதன் ஆரம்ப நிகழ்வுகள் அளக்கட்டு P.P.பொற்கேணி மன்/சாஹிரா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.


புதிதாக பாடசாலைக்கு தரம் ஒன்றில் இணைந்து கொண்ட மாணவ மாணவிகளை கௌரவிக்கும் குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் காதர் மஸ்தான் மற்றும் மன்னார் அரசாாங்க அதிபர் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அத்துடன் மன்னார் மாவட்ட விவசாய திணைக்களத்தினூடாக ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ISRC தனியார் தொண்டு நிறுவனத்தினால் கல்விப் பங்களிப்புக்கு இணங்க மாணவ மணிகளுக்கான பாடசாலை புத்தகப்பைகளும் அன்பளிப்பு செய்து கௌரவிக்கப்பட்டது. 


பாடசாலை அதிபர் ஜனாப் J. சுஹைல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லி டிமெல்,  முசலி பிரதேச செயலாளர் திரு. ரஜீவ், கல்விப் பணிப்பாளர் திரு. பிரட்லி மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் , விவசாய திணைக்கள பணிப்பாளர் திருமதி. சகீலா பானு,  நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திரு. பரச்ஜோதி, ISRC தனியார் தொண்டு நிறுவன பணிப்பாளர் ஜனாப். மிஹ்லார்,  பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விதை நெல் உற்பத்தியாளர் சங்கம் அமைச்சர் றிசாத்துடன் சந்திப்பு.

wpengine

பாடசாலை சீருடை வவுச்சர்களில் மோசடிகள்

wpengine

திகன பிரதேசத்தில் மீண்டும் அட்டகாசம்! அமைச்சர் றிஷாட் பிரதமருக்கு அழுத்தம்

wpengine