பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில்அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (13ஆம் திகதி) நண்பகல் 12.11 அளவில் மன்னார், பெரியமடு, புளியங்குளம் மற்றும் கொக்கிளாய் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Related posts

நல்லாட்சியில் முஸ்லிம்களின் காணிகள் விடுவிக்கப்படாமை ஏமாற்றம் அளிக்கிறது: உதுமாலெப்பை

wpengine

மனைவி மீது கணவன் சந்தேகம்! உறவை கொல்லும்

wpengine

ரணில்,மைத்திரி ஆட்சியில் வாகனப் பதிவு கட்டணம் அதிகரிப்பு

wpengine