பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று நண்பகல் 12.11 அளவில் கல்பிட்டி, துனுபொத்தகம, நிக்கவெவ, சோமாவதி விகாரை மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

Related posts

கொரோனா தாக்கம் தேர்தல் ஒத்திவைக்க முடியும்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி வெளியேற்றம்! அபேகுணவர்தன மருத்துவமனையில்

wpengine

கொரிய நிறுவனத் தலைவர், அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு

wpengine