பிரதான செய்திகள்

இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்

இலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

கட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்காக 011 2 69 68 90 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும்.

முச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறிவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு கட்டண பட்டியல் வெளியிட கூடிய வகையில் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கமைய இன்று முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும்

wpengine

பாடசாலை மாணவர்களை ஏற்றாத பேருந்துகள் மீது நடவடிக்கை.! 1958 இலக்கத்தை அழைக்கவும் .

Maash

ரவிராஜ் வழக்கில் விரைவில் சிலர் கைது: தாஜூடின் கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்- அஜீத் பீ. பெரேரா

wpengine