பிரதான செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது!

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 7 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 333 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 15 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலையாக 310 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது,.இதன்படி, மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் சதொச வளாகத்தில் மீண்டும் அகழ்வு பணிகள்!

wpengine

குர்திஷ்களின் சுயாட்சியை தடுக்க சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி.

wpengine

கே.ஏ.பாயிஸ் (52) உயிரிழந்தமை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது

wpengine