பிரதான செய்திகள்

இன்று தொழிலாளர் தினம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக்கூட்டம் இன்று காலி சமனல விளையாட்டு திடலில் இடம்பெறவுள்ளது. மூன்று பேரணிகள் மூலம் கட்சி ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து
கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக காலி நகரிற்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் மற்றும் காலி கோட்டை பகுதிக்குள் பிரவேசிக்கும் வாகனங்களின் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படும் என காவற்துறை
தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தமது மே தினக்கூட்டத்தை பொரளை கெம்பல்
மைதானத்தில் நடத்தவுள்ளது.

மாளிகாவத்தை மற்றும் ஆமர் வீதியிலிருந்து பஞ்சிகாவத்தை, மருதானை, புஞ்சி பொரல்ல, பேஸ்லைன் வீதி ஊடாக ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணி கெம்பல் மைதானத்தை
சென்றடையும். இந்த மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனநாயக தேசிய இயக்கம்
பேரணியாக, ஹைட் திடலில் இருந்து டி.பி ஜயா மாவத்தை, காமினி மண்டபம்,
பொரல்ல ஊடாக கெம்பல் மைதானத்தை சென்றடையவுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தினக்கூட்டம் இன்று கிருலப்பனை லலித் அத்துலத் முதலி விளையாட்டு திடலில் இடம்பெறவுள்ளது இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொழிலாளர் தினக்கூட்டம் இன்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக்கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஜே.வீ.பியின் மே தினக்கூட்டம் கொழும்பு  பீ.ஆர்.சீ திடலில் இடம்பெறவுள்ளது.
இதன்போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நான்காயிரத்து 100 காவற்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கைகளுக்காக 2 ஆயிரத்து 500
காவற்துறையினரை ஈடுபடுத்தவுள்ளதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம்
தெரிவித்துள்ளது.

மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் காரணமாக இன்று இரவு முதல் வீதிகள் பலவற்றின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கை அணியினை நோக்கி இங்கிலாந்து அணிக்கு 255

wpengine

நாளை தீர்ப்பு! மஹிந்த ,ரணில் தொலைபேசி கலந்துரையாடல்

wpengine

அரச ஊழியர்களுக்காக குரல் கொடுக்கும் ஊழல் எதிர்ப்பு முன்னணி

wpengine