பிரதான செய்திகள்

இன்று இரவு அமைச்சராகும் 15பேர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று இரவு பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரவு அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணி குறித்த தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சுக்களுக்கு அமைச்சர்களை தெரிவு செய்வதில் நிலவிய இழுபறியின் காரணமாக கடந்த ஓரிரு தினங்களாக பிற்போடப்பட்ட அமைச்சரவை பதவியேற்பு, நாளைய தினம் இடம்பெறும் என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 15 உறுப்பினர்கள் இன்று இரவே அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளனர் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

முடிந்தது ஜெனீவா திருவிழா; அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?

Editor

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு.

Maash

வாக்குகளுக்காக மட்டுமே எமது சமூகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

wpengine