பிரதான செய்திகள்

இனவாதிகளுக்கு விக்கினேஸ்வரனே களம் அமைத்து கொடுக்கின்றார்

விக்­கி­னேஸ்­வரன் தமிழ், சிங்­கள அடிப்­ப­டை வாதி­க­­ளுக்கு களம் அமைத்­துக் கொடுத்து பிரச்­சி­னை­களை சிக்­க­லாக்கும் கருத்­துக்­களை தெரி­வித்து வரு­கிறார்.  வடக்கில் இரா­ணுவப் பிரசன்னம் படிப்­ப­டை­யாக குறைக்­கப்­படும். எதி­ர்­கா­லத்தில் அங்கு அகதி முகாம்­க­ளுக்கு இட­மில்லை. மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்கள் என்று  சபை முதல்­வரும், உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்­ச­ரு­மான லக்ஷ்­மன் கிரி­யெல்ல  தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர்  மேலும் தெரி­விக்­கையில்,

நாட்டில் இன்று மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­கி­ன்­றன. அதே­வேளை கடந்த கால காட்டு தர்பார் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்டு சட்­டத்தின் ஆதிக்கம் நாட்­டுக்­குள் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த ஒரு வரு­டத்தில் புதிய நல்­லாட்சி அரசாங்கம் தமிழ் மக்­க­ளி­னதும், சிறு­பான்மை மக்­க­ளி­னதும் ஜன­நா­யக உரி­மை­களை பாது­காத்து சம உரி­மை­களை வழங்­கி­யுள்­ளது. அத்­தோடு தமிழ், சிங்­கள மக்­க­ளி­டை­யே தேசிய நல்­லி­ண­க்­கத்தை ஏற்­ப­­டுத்­­து­­வதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில்­ விக்­கி­ர­ம­சிங்­கவும் விசேட வேலைத்­திட்­டங்­களை நாட்டில் முன்­­னே­டுத்து வரு­கின்­றனர்.

வடக்கில் ஒரு அகதி முகாம்­கூட இருக்­கக்­கூ­டாது. மக்கள் அனை­வரும் அவர்­க­ளது சொந்தக் காணி­க­ளி­லேயே மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்­டு­மென்­பது தான் அரசின் கொள்­கை­யாகும். அதற்­கான அனைத்த நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டு வரு­­கின்­றன. எனவே அர­சாங்கம் படிப்­ப­டி­யாக தமிழ் மக்­க­ளி­னது தேவை­களை நிறை­­வேற்றி வரு­கி­றது.

மனித உரி­மை­களை, அடிப்­படை உரி­மை­களை பாது­காக்க விசேட திட்டங்­களை முன்­னெ­­டுக்­கின்­றது. இத­னை சர்­வ­தேசம் புரிந்து கொள்ள வேண்டும். முப்­பது வரு­ட­காலம் யுத்தம் முடி­வ­டைந்து தற்­போது ஒரு­வ­ரு­ட­கால காலப்­ப­கு­திக்குள்தான் நல்­லாட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே அனைத்­­­தையும் உடனடியாக நிறை­வேற்ற முடி­யாது.

வட­மாகாண முத­ல­மைச்சர் படித்­தவர், பண்­பா­னவர் அர­சியல் வியூகம் தெரி­ந்­த­வர் என நினைத்தேன். ஆனால் தற்­போ­­தைய அவ­ரது செயற்­பாடுகள் கவ­­லை­ய­ளிக்­கின்­றன. இரா­ணுவ முகாம்­க­ளை ஒரே நாளில் அடைக்­கச் சொல்­கிறார். அவர் வெ ளியிடும் கருத்­துக்கள் தமிழ், சிங்­கள அடிப்­படை வாத இன­வா­தி­க­­ளுக்கு தீனி போடு­வ­தாக அமைந்­தள்­ளன. அவர் நாட்­டுக்குள் பிரச்சி­னை­களை மேலும் சிக்­க­லாக்­குகின்றார்.

முத­ல­மைச்­சரின் நட­வ­டிக்­கைகள் நாட்டில் இன­வா­தத்தை தூண்­டு­வ­தா­கவே அமைந்­துள்­ளன. வடக்கில் படை­யி­னரை வைத்­தி­ருக்க வேண்­டிய அவ­சியம் அர­சுக்கு கிடை­யாது. அதே­வே­ளை தேசிய பாது­காப்பு தொடார்­பிலும் அர­சு கவனம் செலத்த வேண்­டும். எனவே படிப்­ப­டி­யாக வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் வெ ளியேற்­றப்­ப­­டும்.

எதிர்க்­க­ட்சித் தலை­வர் இரா. சம்­பந்தன் ஆக்­க­பூர்­வ­மான நட­வடிக்­கை­க­ளுக்கு ஆத­ரவு வழங்கி செயற்­ப­டு­கின்றார். எதிர்க்­­கட்சித் தலை­வ­ருக்க அர­சியல் வியூகமும் தாற்­ப­ரி­யமும், விட்டுக் கொடுப்பும் தெரிந்­துள்­ளது. அந்த அர­சியல் நாக­ரீகம் விக்­கி­னேஸ்­வ­ர­­னுக்கு தெரி­யா­தது கவ­லை­ய­ளிக்­கின்­றது என்றார்.

Related posts

சிரியாவில் குண்டுவெடிப்பு; 101 பேர் பலி

wpengine

புதிதாக 20ரூபா நாணயம்! 70வது ஆண்டு நிறைவு

wpengine

மார்க்க கடமையினை கூட உடைத்தெறிகின்ற சமுகமாக இருக்கின்றோம் -அமீர் அலி

wpengine