பிரதான செய்திகள்

இனவாதம், மதவாதம் இல்லாத கௌரவமான ஓர் தலைவர் என்றால் அது ரணில் விக்ரமசிங்க மட்டும் தான்

முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார்.


இனவாதம், மதவாதம் இல்லாத கௌரவமான ஓர் தலைவர் என்றால் அது ரணில் விக்ரமசிங்க மட்டும் தான் என்பதே முஸ்லிம் மக்களின் நம்பிக்கையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் தேர்தல் ஒன்றில் முஸ்லிம் மக்களின் அதிகளவான மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றிற்கு தெரிவான பௌசீ தற்பொழுது ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோருகிறார். 575000 பணம் தேவை

wpengine

வரட்சி உலர் உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை

wpengine

இராணுவத் தளபதி மடு தேவாலயத்திற்கு திடீர் விஜயம்

wpengine