அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

இனவாதம் அற்ற இலங்கையை கட்டியெழுப்பி, தாய் மொழியில் அரச சேவை கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

அரசியல் நிலைமை மற்றும் மொழி ரீதியான பிரச்சினைகள் காரணமாகவே இந்த நாட்டின் இனங்களுக்கு இடையில் சகவாழ்வு இல்லாமல்  போயுள்ளது. எனவே முதலில் இனவாதம் அற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். அதன் ஊடாக ஒவ்வொரு பிரஜையும் தனது  தாய் மொழியில் அரச சேவையை பெற்றுக் கொள்ளும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முஹம்மத் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (21) மாகும்புர, பன்னிபிட்டியவில் உள்ள தேசிய கல்வி மொழி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெள்ளிக்கிழமை (22) சர்வதேச தாய்மொழி தினமாகும்.1999 இல் யுனெஸ் நிறுவனம் இந்த தாய் மொழி தினத்தை பிரகடனப்படுத்தியது. 1947 ஆம் ஆண்டு எமது அயல்நாடு இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதன் பின்னர் பாகிஸ்தான் என்ற நாடு வடக்கு பாகிஸ்தான், தெற்கு பாகிஸ்தான் என பிரிந்தது.தெற்கு பாகிஸ்தான் வங்களாதேசமாக மாறியது. அங்கு வங்காள மொழி பிரதானமாக காணப்பட்டது. பாகிஸ்தான் உருது மொழியை பிரதான மொழியாக அறிவித்தது. எனினும் அங்கிருந்த மக்கள் தமது உரிமை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு தமது தாய் மொழியை பெற்றுக்கொண்டார்கள்.

எமது நாடும் மொழி காரணமாக இரத்தம் சிந்தியது. மொழிக்காக பல போராட்டங்கள் இந்த நாட்டில் இடம்பெற்றுள்ளன. மொழி என்பது உரிமை.தமக்கான மொழியில் செயலாற்றுவதற்கான உரிமை இங்கு காணப்பட வேண்டும்.நான் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையில் சமாதானம், சகவாழ்வு இல்லாமல் போனாமைக்கான காரணங்களை ஆய்வு செய்த நிறுவனமொன்றின் அறிக்கைகளை பார்வையிட கிடைத்தது. அதில் முதல் காரணியாக அரசியல் நிலமைகள் உள்ளன. இரண்டாவதாக மொழி ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றன.

நாட்டின் பிரஜைகள் எந்தவொரு அரச சேவையை பெற்றுக் கொள்ள முற்படும் போது தனது தாய் மொழியில் சேவையை 

பெற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.எனினும் துரதிஷ்டவசமாக சுதந்திரம் அடைந்து 77 வருடங்கள் கடந்தும், குறிப்பாக  இந்தியா- இலங்கை உடன்படிக்கையில் கூட தமிழ் மொழியை ஏற்றுக் கொண்ட போதும் அரச திணைக்களங்களில் தமது தாய்மொழியில் சேவைகளை பெற முடியாத நிலை உள்ளது.

எனவே இந்த நாட்டில் மீண்டும் இனவாதம் தோற்றம் பெறக் கூடாது. இனவாதம் அற்ற நாடே எதிர்காலத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.எதிர்காலத்தில் அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு அரச சேவைகளை அரச திணைக்களங்களில் தமது தாய் மொழியில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றார்.

Related posts

அனைத்து MPகளும் தங்களின் தனிப்பட்ட வாத,விவாதங்களை தவிர்த்து நாட்டின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி!

Editor

அடுத்த வருடமும் மிகவும் நெருக்கடியான வருடமாக இருக்கும் எனக்கு பைத்தியமில்லை- ரணில்

wpengine

வவுனியா பொலிஸ் பொம்மைக்கு லஞ்சம் வழங்கிய நபர்

wpengine